வருடாந்த பேருந்து கட்டண திருத்தம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
வருடாந்த பேருந்து கட்டண திருத்தமானது முரணானது மற்றும் சீரற்றது என லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
கட்டணங்களை முறைப்படுத்துவதில் அரசாங்கம் திட்டமிட்டுத் தவறியுள்ளதாகவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்றிரவு (05-07-2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையிலேயே இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டணக் கட்டமைப்பு
லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இத குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போது நாடு முழுவதும் 10,000 இற்கும் மேற்பட்ட குறுகிய தூர பேருந்துகளும் மற்றும் சுமார் 3,000 நீண்ட தூர பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் குறுகிய தூர மற்றும் நீண்ட தூர பேருந்து சேவைகளுக்கு என இரண்டு வெவ்வேறு கட்டணக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது பயணிகள் மீது வீண் சுமையை ஏற்படுத்தும்.
கட்டண உயர்வு
வருடாந்த கட்டண திருத்தத்தின் கீழ் குறுகிய தூர பேருந்து சேவைகளுக்கு 12 வீத கட்டண உயர்வும் நீண்ட தூர பேருந்து சேவைகளுக்கு 20 வீத கட்டண உயர்வும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் (NTC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது டீசல் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில் இந்த 12 வீதம் குறுகிய தூர கட்டண உயர்வு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எரிபொருள் விலை மேலும் குறைந்தாலும் பேருந்து உரிமையாளர்களால் குறுகிய தூர கட்டணங்களை மீண்டும் குறைக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்தத் தன்னிச்சையான பேருந்து கட்டண திருத்த முடிவு, எதிர்காலத்தில் தனியார் பேருந்து தொழில்துறையை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |