பிளவடைகிறதா பொதுஜன பெரமுன? உறுப்பினர்களுக்கிடையில் அடிதடி!
விமல் வீரவன்ச(Wimal Weerawansa) மற்றும் பசில் ராஜபக்ச(Basil Rajabaksha) அணியினருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுக்கிடையிலேயே மோதல் இடம்பெற்றுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ(Nimal Piyatissa) பொதுஜன பெரமுனவின் சாமர சுபாஷன டி சில்வா(Chamara Subhasana De Silva) ஆகியோரே கைகலப்பில் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற கொத்மலை பிரதேச அபிவிருத்தி கூட்டத்தின் போது வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலில் முடிவடைந்தது.
அபிவிருத்தி பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த மோதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச இடையேயான வெளிப்படையான மோதல், தற்போது கட்சி உறுப்பினர்களிடையே கூட பரவியிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.