தமிழர் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த இழிச் செயல்: அதிரடியாக கைதான காவல்துறை அதிகாரி
பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு(Batticaloa) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் காவல்துறை அதிகாரி ஒருவரே இன்று(25.03.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேகநபரான காவல்துறை அதிகாரி, பொத்துவில் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றும் போது அங்கு முறைப்பாடு பதிவிடவந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இதையடுத்து குறித்த பெண்ணுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில்,பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அவர் பாணமை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொத்துவில் காவல்துறையினர் சந்தேகநபரை இன்று(25) கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
