அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது : வெளியான அறிவிப்பு
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அரசியலமைப்பு சபை முதற் தடவையாக இன்றைய தினம் (08) கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் இன்று பிற்பகல் அந்த சபை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasooriya) பெயர் இதன்போது அங்கீகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அரசியலமைப்பு சபை அனுமதி
பதில் காவல்துறை மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு 14 நாட்களுக்கு மேல் கடமையாற்றுவாராயின் அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில் 23ஆம் திகதி புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |