ராஜபக்ச மாமாவிற்கு தொடர்பா? தொழிலதிபர் வெளியிட்ட தகவல்
Money
SriLanka
Dilith Jayaweera
By Chanakyan
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய எந்த நபரின் ஆதரவிலும் பணம் சம்பாதிக்கப்படவில்லை என்று பிரபல தொழிலதிபர் திலித் ஜெயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அந்தப் பதிவில்,
தற்போதைய அரசாங்கத்தின் உதவியுடன் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததாக அண்மையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ரெபிட் ஆன்டிஜன் கருவிகளை இறக்குமதி செய்வதில் மோசடி செய்ததாக என் மீது அரசியல்வாதிகள் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
கல்பிட்டியில் காவல் தொழில் செய்யும் ராஜபக்ச மாமாவிற்கு கூட கடன் இல்லை என அவர் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் பதிவினை பதிவு செய்துள்ளார்.
[]