சோதனையில் சிக்கிய ரணில்: புதிய அமைச்சரவை நியமிப்பதில் இழுபறி நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் புதிய அமைச்சரவை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தருவதாக பல கட்சிகள் உறுதியளித்திருந்த போதும், தற்போது பின்வாங்கியுள்ளனர்.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை காரணமாக தமது ஆதரவினை வழங்க முடியாது, அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ரணில் தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவாக 117 ஆசனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில்அரச தலைவர் மற்றும் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அமைச்சரவையில் அமைச்சுக்களின் எண்ணிக்கை 20 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசசேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகரவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ எல் பீரிஸ் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சராக சஜித் அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டீ சில்வாவை பொறுப்பேற்க முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் அமைச்சுக்களுக்கு மாத்திரம் ராஜாங்க அமைச்சு நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சஜித் தரப்பிலுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
20 அமைச்சுகள் என மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் யாருக்கு அமைச்சு பதவி என்பது தொடர்பிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை 17 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022