திருக்குமார் நடேசனிடம் விசாரணை - சிறிலங்காவிலிருந்து வெளியேறிய முன்னாள் பிரதி அமைச்சர்?
SriLanka
Nirupama Rajapaksa
Thirukumar Nadesan
Pandora Document
By Chanakyan
பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் அவரது மனைவியான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ளார் எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் உடனடியாக விசாரணையினை முன்னெடுக்க வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.