போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் நஷ்டம் : கோப் குழுவில் வெளியான தகவல்

By Beulah Oct 28, 2023 12:54 AM GMT
Report

சிலர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன்களைப் பெற்றதன் காரணமாக, வங்கிக்கு ஏற்பட்ட 68 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கடந்த வாரம் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) அரச ஈட்டு முதலீட்டு வங்கி அழைக்கப்பட்டிருந்தது.

இதில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2020, 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை என்பன ஆராயப்பட்டன.

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்

இதில் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். 

தானியங்கி வங்கிக் கட்டமைப்பு

இதன்போது .முழுமையாக தானியங்கி வங்கிக் கட்டமைப்பை நிறுவுவதில் தாமதம் இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய முழுமையாகத் தானியங்கி வங்கிக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் நஷ்டம் : கோப் குழுவில் வெளியான தகவல் | Cope Calls For Report On Rs 68 Million Fraud At

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டு யூலை மாதம் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். 

மோசடி 

அத்துடன், வங்கியில் பணியாற்றிய சில அதிகாரிகளின் உதவியுடன் கடன்களுக்கு விண்ணப்பித்த 49 பேருக்கு உரிய கடன் தொகையை கொடுத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளமையும் இங்கு வெளிப்பட்டது.

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் நஷ்டம் : கோப் குழுவில் வெளியான தகவல் | Cope Calls For Report On Rs 68 Million Fraud At

சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக 8 மில்லியன் ரூபா கிடைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதிகாரிகள் தண்டிக்கப்படாததுடன், இந்தப் பணத்தை மீட்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்தும் குழு விசேட கவனம் செலுத்தியது.

பணிப்புரை 

இந்த விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் நஷ்டம் : கோப் குழுவில் வெளியான தகவல் | Cope Calls For Report On Rs 68 Million Fraud At

அத்துடன் வங்கியின் செயற்படாத கடன் விகிதத்தின் சராசரி மதிப்பைவிட,10 கிளைகள் அதிக செயல்படாத கடன் விகிதத்தை பதிவு செய்திருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த வங்கியின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதால், நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024