இன்றும் 15 பேரை பலியெடுத்தது கொரோனா -தொற்று 2500 ஐ தாண்டியது
srilanka
corona
death
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று 2,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 125,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று (09) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்