குளியாப்பிட்டியில் மீண்டும் கொரோனா கொத்தணிகள்!! வெளிவந்த எச்சரிக்கைத் தகவல்
corona
people
kuliyapitiya
By Shalini
குளியாப்பிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விரைவான அன்டிஜென் சோதனைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
குளியாப்பிட்டி - எலத்தலவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் அப்பகுதியில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொண்டதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், நாட்டில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.