பரவலடையும் கொரோனா - மேலும் சில பகுதிகள் முடக்கம்
srilanka
corona
curfuew
By Vasanth
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் இன்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுன்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இந்நிலையிலேயே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மவுன்ஜீன் தோட்டம் முடக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், இத்தோட்டத்தில் உள்ளவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி