சீனாவில் மீண்டும் அதிகரித்தது கொரோனா -பாடசாலைகள் மூடப்பட்டன -விமானசேவைகளும் இரத்து
corona
china
school closed
Airlines canceled
By Jaso
சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்த நிலையில், சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவுவதை அடுத்து, 40 இலட்சம் பேர் வரை வசிக்கும் லான்சோ மாகாணத்தில், மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாடசாலைகள் மற்றும், சுற்றுலாத் தலங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 11 மணி நேரம் முன்
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்