சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி
Corona
MP
Charles Nirmalathan
By MKkamshan
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு (Charles Nirmalathan) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.