திடீரென உயர்வடைந்த கொரோனா தொற்றாளர்கள்! முடங்கும் சிறிலங்கா - முக்கிய செய்திகளின் தொகுப்பு (காணொளி)
* நோயைப் பரப்பி, இந்த நாட்டை மீண்டும் ஒருமுறை நாட்டை பாதாளத்தில் தள்ளவே ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது. எனவே ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர சூளுரை
* மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்றுமுந்தினம் காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
* நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் கலந்தாலோசித்து முக்கிய தீர்மானமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
* நாட்டில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,