அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் - முடக்கப்படுமா வரலாற்று பிரசித்திபெற்ற நகரம்?
கண்டி மாவட்டத்தில் மட்டும் நேற்றையதினம் 59 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கண்டி மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1891ஆக உயர்வடைந்துள்ளது.
அதேபோன்று அந்த மாவட்டத்தில் கொரோனா மரணம் 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கண்டி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 384 பேருக்கும், அக்குறணையில் 340 பேருக்கும், பஹத்ததும்பர பகுதியில் 168 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்கள் தவிர்ந்த, கம்பளையில் 144 பேர், பூஜாப்பிட்டியவில் 118 பேர், குண்டசாலையில் 108 பேர், உடுதும்பர பகுதியில் 76 பேர், மெததும்பர பகுதியில் 66 பேர்,யட்டிநுவர பகுதியில் 64 பேர், ஹாரிஸ்பத்துவ பகுதியில் 63 பேர், மெனிக்கின்ன பகுதியில் 58 பேர், கங்கவட்டகோரள பகுதியில் 54 பேர், பம்பரதெனியவில் 53 பேர், பாத்தஹேவாஹட்ட பகுதியில் 30 பேர், கலஹாவில் 32 பேர், தொழுவ பகுதியில் 32 பேர், கங்க ஒஹல கோரளவில் 28 பேர், கலகெதரவில் 20 பேர், ஹத்தரலியத்தவில் 10 பேர், நாவலப்பிட்டியவில் 34 பேர், உடுதும்பரவில் 06 பேர், பன்விலவில் 02 பேர், மினிப்பே பகுதியில் 02 பேர் என கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றனர்.
எனவே அதிகரித்து வரும் தொற்றாளர்களை அடுத்து கண்டி நகரமும் விரைவில் முடக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.