தப்பி ஓடிய கொரோனா தொற்றாளர்! பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
srilanka
police
arrested
By Vasanth
கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சப்புகஸகந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான 22 வயதான இளைஞர் ஒருவர், தனது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்கள் உதவியை பொலிஸார் எதிர்பார்த்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தப்பியோடிய கொரோனா தொற்றாளர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவரது ஒளிப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் காவல்துறை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி