கனடாவை ஆட்டம்காண வைக்கும் கொரோனா! 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள்
Corona
Death
canada
People
By Chanakyan
கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14 லட்சத்து ஏழாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26ஆயிரத்து 23பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 12ஆயிரத்து 797பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 567பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13 லட்சத்து 68ஆயிரத்து 449பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி