சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு உள்ளூரில் இருந்தே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம் அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 19 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,106 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.