புதிய கொரேனா வைரஸ் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
முன்னரைவிட சக்திவாய்ந்த கொரோனா வைரஸ் தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பழைய கொரோனாவை விடவும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. புதிய கொரோனாவை தவிர்க்கும் வகையில் ஏராளமான உலக நாடுகள் இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன.
மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறைந்தது 12 நாடுகளுக்காவது புதிய கொரோனா பரவிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 8 நாடுகள் ஐரோப்பாவை சேர்ந்தவை. பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கே புதிய கொரோனா பரவியுள்ளது.