தொடரும் கொரோனா அச்சறுத்தல்! காலியில் தனிமைப்படுத்தப்பட்ட இரு இடங்கள்
curfew
Corona
Galle
SriLanka
By Chanakyan
காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவில் இரு பிரதேசங்கள் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இம்புல்கொட கிராம சேவகர் பிரிவு மற்றும் கட்டுதம்பே கிராம சேவகர் பிரிவு ஆகியவையே இவ்வாறு இன்று இரவு 8 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு பிரதேசங்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்