கோட்டாபயவின் அறிவுறுத்தலில் நாமல் ஒருங்கிணைத்துள்ள செயற்றிட்டம்
சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் இணைந்து நாட்டில் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
இதன்படி, கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் மக்களின் வசதிக்காக இணையத்தளமொன்றை வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் எதிர்வரும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
புதிய இணையத்தளமூடாக பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான திகதி, நேரம் மற்றும் மத்திய நிலையம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட "தடுப்பூசி சான்றிதழை" பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் பெறவுள்ளனர்.