தடுப்பூசி பயன்படுத்தப்படும் நிலையிலும் இலங்கையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
srilanka
vaccine
corona virus
By Vasanth
இலங்கையில் மேலும் 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 955 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இரண்டாவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நாட்டில் இதுவரை 72,166 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினம் நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 976 ஆகும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி