கொரோனாவின் புதிய அலை! 24 மணித்தியாலத்தில் 10ஆயிரம் பேர் உயிரிழப்பு
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 கோடி 87 லட்சத்து 89 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய கொரோனா தொற்றினால் 28 லட்சத்து 15 ஆயிரத்து 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை மொத்தமாக 3 கோடியே 10 லட்சத்து 97 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.