இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது! அச்சத்தில் விஞ்ஞானிகள்
corona virus
united kingdom people
By Vasanth
இங்கிலாந்தில் இருந்து உருமாற்றம் அடைந்து பரவிய புதிய வகை கொரோனா வைரஸ், அதிதீவிரமாக பரவும் தன்மையுடன் மரபணு மாற்றம் அடைந்திருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அதிவேக தொற்றும் தன்மையுடன் பரவி வருகிறது. இந்த அதிவேக தொற்றும் தன்மைக்கு, கொரோனா வைரஸ் பரவ உதவும், ஸ்பைக் ஜீனில் ஏற்பட்டிருக்கும் மரபணு மாற்றமே காரணம் என்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், மேலும், அதிதீவிர பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் பெற்று தெற்கு இங்கிலாந்தின் பகுதியொன்றில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி