கொரோனா புதிய விகாரம் - ஆரம்பமாகியது சோதனை
கொரோனா வைரஸின் புதிய விகாரங்களைக் கண்டறிவதற்கான இரண்டாவது சுற்று சோதனைகள் இன்று (1) தொடங்கியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடம், ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைத் தலைவர் டொக்டர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எழுமாறாக பெறப்பட்ட மாதிரிகள் இந்த சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சோதனைகள் குறித்த அறிக்கைகளை ஒரு வாரத்திற்குள் வெளியிடமுடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய கொரோனா வைரஸ் விகாரங்களை அடையாளம் காண்பதற்கான சோதனைகள் அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேரிடம் பரவியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
புதிய விகார கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதாகக் கண்டறியப்பட்ட இந்த குழுவில், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த பல வெளிநாட்டவர்களும் அடங்குவர்.