நடத்தப்படும் அரசியல் நாடகம் : பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர அரசு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் எந்த கள்ளர்களையும் எப்போதும் பிடிக்காது காரணம் அவர்களும் மக்களை ஏமாற்றி ஆட்சியமைத்தவர்கள்தான் என சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் கடுமையாக சாடியள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கள்ளர்களை பிடிக்க போவதாக அநுர அரசு தெரிவித்தாலும் அது ஒரு போதும் நடக்காத விடயம்.
அநுர அரசு நடத்துவது அனைத்தும் அரசியல் நாடகம், இவர்கள் நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வார்களா என நினைப்பது கேள்விக்குறிதான்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அநுர அரசின் மீதான கேள்விக்குறி, எதிர்கால அரசியல் திட்டம், தற்போதைய அரசியல் நிலைமை, நாட்டில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நேருக்கு நேர் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |