அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் - யாழில் அநுர தரப்பு அறிவிப்பு
அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம்.
அடுத்த ஆண்டு மாகாண சபை
தற்போது நாட்டில் பல அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிவரஞ்சனி மு.நாகேந்திரன் - வடமாகாண அலுவலக உதவி தொழில் ஆணையாளர் யூ.அன்ரன் தனேஸ் - யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் யாழ் மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள் நடமாடும் சேவையை பெற வந்த பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
