2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக இருக்கும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
International Monetary Fund
Sri Lanka
IMF Sri Lanka
By Pavi
இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் 4 சதவீதத்தை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2027ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாகக் குறையும் எனவும் அந்த அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
2025ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் 4 சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாகவும் வளர்ச்சி வீதம் குறையும் என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்