காட்டில் காணாமற்போன புதுமண தம்பதிக்கு நேர்ந்த பயங்கர அனுபவம்
ஹல்துமுல்ல பம்பரகந்த யால சமவெளி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டில் காணாமல் போன புதுமண தம்பதியினர் இன்று (11) மாலை ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பத்திரமாக மீட்டுள்ளதாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருவலகஸ்வெவ நெலும்வெவ பகுதியைச் சேர்ந்த நவோத்யா மதுரங்க (வயது 24) மற்றும் தமுதேகம செவுவந்தி சந்தீபனி (வயது 23) என்ற புதுமண தம்பதியரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பயங்கரமான அனுபவம்
காட்டில் சிக்கித் தவித்த நவோத்யா தரங்கா, தான் சந்தித்த பயங்கரமான அனுபவத்தை பின்வருமாறு விபரித்தார். “இன்றுடன் எட்டாவது நாள் வீட்டிலிருந்து வந்த நாங்கள் கல்யாணமாகி மூன்று மாதம்தான் ஆகிறது.
பம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம். இதன்போது நாங்கள் இடம் விட்டு இடம் மாறினோம்.அவ்வாறு மாறும்போது காட்டில் தொலைந்து போனோம்.
காட்டுக்குள் எந்த வழியில் செல்வது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் இருந்த இடம் சிறிய தாய்க்கு கைபேசி மூலம் அனுப்பப்பட்டது. அத்துடன் கைபேசி பற்றரிகளும் செயலிழந்தன.
கண்டுபிடித்த காவல்துறை
பின்னர், சிறிய தாய் காவல்துறைக்கு நாம் இருந்த இருப்பிடத்தை அனுப்பியதால், ஹல்துமுல்ல காவல்துறையினர் எமது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். நாங்கள் இரவை இருட்டில் கழித்தோம், காட்டு விலங்குகளால் பாதிக்கப்படவில்லை. அது ஒரு பயங்கரமான அனுபவம்.
எங்களைக் காப்பாற்றிய ஹல்துமுல்ல காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நாங்கள் மிகவும் நன்றி கூறுகின்றோம்" என தெரிவித்தார்.
ஹல்துமுல்ல காவல் நிலைய பிரதான பரிசோதகர் அசங்க சுரவீர தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தம்பதியை மீட்டுள்ளனர்.