சோஹாராவின் கட்சி உறுப்புரிமை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
Srilanka Muslim Congress
Sri Lankan Peoples
Law and Order
Colombo Municipal Council
By Dilakshan
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) வெளியிட்ட கடிதத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவானது, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் பதவி
கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அவர் எடுத்த முடிவைக் காரணம் காட்டி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரது உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியது, இது கட்சி தனது நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று கூறியது.

அதன்படி, குறித்த இடைநீக்கக் கடிதத்தை ரத்து செய்ய ஜோஹாரா புஹாரி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி