மூன்று ஈரானியர்களுக்கு ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் அபராதம்
உடுகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மூன்று ஈரானியர்களுக்கு ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
சிங்கராஜ வனம்

சிங்கராஜ வனப்பகுதியில் தாவர, விலங்குகளின் பாகங்களை சேகரித்த குற்றச்சாட்டில் அவர்களுக்கு அபராதத்தை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பாகங்கள்

ஈரானிய பிரஜைகள் மூவர் சிங்கராஜ வனப்பகுதியில் தாவர,விலங்குகளின் பாகங்களை சேகரித்துச் சென்றுகொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால் அம்மூவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து , குறித்த தரப்பினர் இன்று (12.08.2023)உடுகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொழுது , அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதவான் குறித்த மூவருக்கும் தலா 44 இலட்சம் ரூபாய் அபராத்தை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.