முப்பது கோடி சொத்துக்களை பறிக்க உத்தரவு : வெளியானது காரணம்
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான முப்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை குடு அஞ்சுவின் நெருங்கிய உறவினரான "அகுலனே குடு சானா" என்பவரின் சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட உள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சந்தேக நபரான அகுலனே குடு சானா மற்றும் அவரது தாயார் (குடு ஸ்ரீமதி), சந்தேகநபரின் மனைவி மற்றும் சகோதரர் (அகுலனே பொடி மான்) ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |