செம்மணி வழக்கில் திடீர் திருப்பம்: தப்பிச்செல்லும் இராணுவக்குற்றவாளிகள்
செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு 14 ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யாழ், செம்மணியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் அங்கு மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள எட்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்த வழக்கே 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், மேலதிகமாக எட்டு வாரங்கள் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கான பாதீடுகளை தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதியையும் வழங்கியுள்ளது.
இது தொடர்பிலும், செம்மணியின் அடுத்த கட்டம், அரசாங்க தரப்பின் அடுத்த கட்டம், அகழ்வு நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
