நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான (Local Government Election) நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) இன்று (10) சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்கள்
இந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு குறித்த உத்தரவுகளை பிறப்பித்தது.
தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
