சர்ச்சைக்குரிய யூரியூபர் கிருஷ்ணாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sathangani
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த யூரியூபர் கிருஷ்ணாவை எதிர்வரும் 02.04.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த யூரியூபர் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மல்லாகம் நீதிமன்றம்
இந்த நிலையில் குறித்த யூரியூபர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை காவல்துறையினர் கடந்த 10.03.2025 அன்று அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதன்போது குறித்த யூரியூபரை இன்றுவரை (19) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 02.04.2025 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு. கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்