வெடுக்குநாறி மலைக்கு செல்லும் பக்தர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Vavuniya M A Sumanthiran
By Pakirathan Apr 24, 2023 09:20 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகளை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்பட்டு, காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை, அதிபர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம். ஏ. சுமந்திரன்

வெடுக்குநாறி மலைக்கு செல்லும் பக்தர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! | Court S Order Devotees Going To Vedukunari Hill

தொடர்ந்தும் வழக்கின் தீர்ப்புகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் காவல்துறையினர், இனந்தெரியாத நபர்களினால் வணக்கத்திற்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னேடுப்பதாக சொல்கின்றனர்.

கடந்த தினத்தில் மேலதிகமாக அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதற்கமைவாக, இன்று குறித்த இடத்தில் நீண்டகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புகைப்பட ஆதாரங்களை அவர்களே சமர்ப்பித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொல்லியலுக்குரிய பிரதேசமென்றும், இன்று நாங்கள் செய்த விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பதற்கு அரச சட்டத்தரணியும் உதவியை நாடியுள்ளதாகவும், அதற்காக பிறிதொரு தினத்தையும் கேட்டிருந்தார்கள்.

நீதிமன்ற உத்தரவு 

வெடுக்குநாறி மலைக்கு செல்லும் பக்தர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! | Court S Order Devotees Going To Vedukunari Hill

எமது அரசியலமைப்பின் 10 ஆம் 14:1 உறுப்புரைகளின் கீழ் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமைகள். மரத்தையோ கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரிமையுள்ளது.

அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது.

ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது.

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திற்கும், பொலன்நறுவைக்கும் சென்று எவரும் வழிபட முடியாது.

இந்த விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார்.

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என உத்தரவு கொடுக்கப்பட்டு, காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடைக்கப்பட்ட சிலைகளை மீள பிரதிஷ்டை செய்வதற்கு தொல்லியல் பிரதேசம் என்ற காரணத்தினாலே அரச சட்டத்தரணியும் வந்த பிறகு ஒரு விண்ணப்பத்தை செய்வதாக சொல்லியிருக்கின்றேன்" என எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016