இலங்கையில் கொவிட் பலி 571 ஆக அதிகரிப்பு
srilanka
covid-19
corona virus
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.
கட்டுகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், எஹலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்