கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 434 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,240 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 561,059 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்