எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன? - இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் விளக்கம்
fuel shortage
fuel crisis
CPC
Srilankan crisis
By Kanna
இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30 - 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 139,000 மெட்ரிக் தொன் எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டார்.
இருப்பினும், 2022 ஜனவரியில் எரிபொருளின் பயன்பாடு 198,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இது வழக்கத்திற்கு மாறான பாவனையில் அதிகரிப்பு என்று கூறிய சுமித் விஜேசிங்க, இந்த அதிகரிப்புக்கான காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.
கடந்த இரண்டு வருடங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் எரிபொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி