எரிபொருள் விலையேற்றத்திற்குப் பின்பும் நஷ்டம்! சிக்கலில் கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம்
எரிபொருள் விலைகள் திருத்தப்பட்ட போதிலும் லங்கா கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் இன்னமும் ஒரு லீட்டர் டீசலில் 66 ரூபாவையும் மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலில் 52 ரூபாவையும் நஷ்டமாகச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லீட்டர் டீசலுக்கான கூட்டுத்தாபனத்தின் அடக்கவிலை (Cost) ரூபாய் 528 ஆகும்.

எனினும் அது ரூபாய் 392 க்கே விற்பனை செய்யப்படுகிறது.
அரசாங்கத்தின் லீட்டருக்கு ரூபாய் 70 மானியத்தைக் கழித்த பின்னரும் கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலில் ரூபாய் 66 நஷ்டமடைகிறது.
சுத்திகரிப்பு நிலையம்
ஒரு லீட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூபாய் 446 ஆக உள்ளபோதிலும் அது ரூபாய் 414 க்கு விற்பனை செய்யப்படுவதால் லீட்டருக்கு ரூபாய் 52 நஷ்டம் ஏற்படுகிறது.

சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் அடக்கவிலை ரூபாய் 581 ஆக இருக்கும் நிலையில் அது ரூபாய் 528 க்கு விற்பனை செய்யப்படுவதால் லீட்டருக்கு ரூபாய் 53 நஷ்டம் ஏற்படுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை உள்ளிட்ட பிற பிரிவுகளில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு இந்த எரிபொருள் விற்பனை நஷ்டத்தைச் ஈடுகட்ட முடிகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |