மஹேல ஜயவர்தனவின் சொத்து அல்ல கிரிக்கெட் - வெளியான கடும் குற்றச்சாட்டு
தவறான முடிவுகளினால் இலங்கை கிரிக்கெட் அழிந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய விளையாட்டு சபையின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மஹேல ஜயவர்தன, பிரமோத்ய விக்ரமசிங்க, ஷம்மி டி சில்வா மற்றும் பலரின் சொத்து அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
22 மில்லியன் மக்களின் விளையாட்டு கிரிக்கெட்
இந்த நாட்டில் உள்ள இருபத்தி இரண்டு மில்லியன் மக்களின் விளையாட்டு கிரிக்கெட் என்றும் அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் நிர்வாகம் பலவீனமாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், ரி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர்களை நிர்வாகம் சரியாக தேர்வு செய்யத் தவறிவிட்டதாகக் கூறுகிறார்.
அண்மையில் இலங்கை அணி தெரிவித்த சில நடத்தைகளுக்கு நிர்வாகமே பொறுப்பு என்று கூறும் தலைவர், போட்டிகளில் தோல்வி அல்லது தவறு நடந்தால் அதற்கு பொறுப்பேற்க யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.