துபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்!
Dubai
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
துபாயில் கைது செய்யப்பட்டு பல கொலை வழக்குகளில் தொடர்புடைய சக்திவாய்ந்த பதாள உலக கும்பலை சேர்ந்த இருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றவாளிகள், இன்று (16) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்
இதேவேளை, அவர்களுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரும் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண் கல்கிஸை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்