கடலட்டை பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! யாழில் விசேட கலந்துரையாடல்

By Kajinthan Apr 03, 2026 01:16 PM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ஆம்பர் எச்சரிக்கை

வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ஆம்பர் எச்சரிக்கை

குத்தகைக் கட்டணம்

இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு பொதுவான சூத்திரமொன்றின் ஊடாகக் கட்டணத்தை மீளக் கணிப்பிடுமாறும், அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கடலட்டை பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! யாழில் விசேட கலந்துரையாடல் | Crisis Facing Sea Cucumber Farmers

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர், தற்போதைய கட்டணங்கள் கணிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ முறைமை தொடர்பில் பண்ணையாளர்களுக்குத் தெளிவுபடுத்தினர்.

அத்துடன், கடலட்டைப் பண்ணையாளர்களின் இந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, மதிப்பீட்டு நடைமுறையை மீண்டும் பரிசீலனை செய்வது தொடர்பில் உரிய துறைசார் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடி ஆவன செய்வதாகப் பதிலளித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் மற்றும் யாழ். மாவட்டக் கடலட்டைப் பண்ணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

தென்னிலங்கையில் கொடூரம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை - ஒருவர் படுகாயம்

தென்னிலங்கையில் கொடூரம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை - ஒருவர் படுகாயம்

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021