2022இல் இலங்கைக்கு கடும் நெருக்கடி!! ஆட்சி மாற்றத்திற்கும் சாத்தியம்
sri lanka
crisis
Rajitha Senaratne
By Vanan
2022ஆம் ஆண்டு இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne).
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
"ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆரம்பமாகின்றது. இலங்கை தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணவில்லை. மனித உரிமைகளை மீறும் 45 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு என்பது தீர்க்கமான வருடமாக அமையும். பல மாற்றங்கள் இடம்பெறும்.
ஆட்சி மாற்றம் கூட ஏற்படும்" என்றார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்