இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரை நெருக்கடி தொடரும் - கோவிந்தன் கருணாகரம்
TNA
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாத வரை பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதியை செலவிட வேண்டியேற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''உள்நாட்டுப் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சிங்கள மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை, தமிழ் மக்கள் நடத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்'' என்றார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி