ஐ.நா மாநாட்டில் சர்ச்சையாக மாறிய அநுரவின் கூற்று! கிளம்பும் விமர்சனங்கள்
அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட ஒரு அறிக்கை ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
"ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது" என்ற ஜனாதிபதி அநுரவின் கூற்றே இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ருவாண்டா ஜனாதிபதியின் கூற்று
ஜனாதிபதி அநுர முன்வைத்த இந்த கூற்று, ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமே முன்பு கூறிய பிரபலமான கூற்று என்று சமூக ஊடக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் ருவாண்டா ஜனாதிபதி ககாமே இந்தக் கூற்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
வேறொரு நாட்டுத் தலைவரின் அறிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது உரையில் இதனை மேற்கோளாகக் குறிப்பிடாமல் கூறியது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதன்படி, இந்த அறிக்கை வேறொரு நாட்டுத் தலைவரின் அறிக்கை என்பதை முறையாக ஒப்புக்கொள்வது ஒரு பொறுப்பான மற்றும் பொருத்தமான செயல் என்று ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
