சஜித்துக்கு சிக்கல்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்ற முறைப்பாடு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி என்ற அமைப்பால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்போது, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனத்தை எதிர்க்கட்சித் தலைவர் இதுவரையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி தண்டனை
அத்துடன், ஊழல் தடுப்புச் சட்டத்தைப் போலவே சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களை சமர்ப்பிக்காத மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சஜித் பிரேமதாசவின் சொத்துக்கள் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும், அவர் முறைகேடாகச் சொத்து சேர்த்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு மேலதிகமாக, முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ சம்பத் தசநாயக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளையும் ஆய்வு செய்யுமாறு கோரியும் தொடர்புடைய அமைப்பு முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

