திருகோணமலை படகு விபத்து விவகாரம்! நடுவீதியில் டயர்களை கொழுத்தி ஒன்று குவிந்த மக்கள் - கிண்ணியாவில் பரபரப்பு (காணொளி)
Death
People
Trincomalee
SriLanka
Kinniya
By Chanakyan
திருகோணமலை - கிண்ணியா பள்ளிவாசலுக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலுக்கு முன்பாக கூடிய மக்கள் கடும் எதிர்ப்பினை முன்வைத்து வருவதோடு குறித்த பகுதயில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
தமக்கான போக்குவத்து வசதிகள் இல்லாமை மற்றும் தம்மை அரசியல் தலைமைகள் கண்டுகொள்ளாமை போன்ற காரணங்களை முன்வைத்து மக்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்