உலக சந்தையில் மேலும் குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை
Fuel Price In World
By Sumithiran
ஈரான்- இஸ்ரேல் பதற்றம் மற்றும் ரஷ்யாவிலிருந்து எந்தவொரு நாடும் (குறிப்பாக இந்தியா) எரிபொருளை கொள்வனவு செய்யக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல் விடுத்த போதிலும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை $67.33 ஆக பதிவாகியுள்ளது. இது 2.79% குறைந்துள்ளது.
குறைவடைந்த பிராண்டட் கச்சா எண்ணெய் விலை
பிராண்டட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை $69.67 ஆக பதிவாகியுள்ளது. இது 2.83% குறைந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஓகஸ்ட் மாதம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்