தல தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : தீயாய் பரவும் பரபரப்பு தகவல்
ஐ.பி.எல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) மனம் திறந்துள்ளார்.
ஐ.பி.எல் இருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ஐ.பி.எல் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான முடிவை எடுக்க இன்னும் 10 மாதங்கள் இருப்பதாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தோனி தெரிவிக்கையில், நான் இன்னும் ஐ.பி.எல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
ஐ.பி.எல் தொடர்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் விளையாடுகிறேன். எனக்கு தற்போது 43 வயதாகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் முடிவில் எனக்கு 44 வயதாகி இருக்கும்.
அதனால், அடுத்த ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.
ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவதைக் காட்டிலும், எனது உடல் தான் நான் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
